தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்தது மிதவை கப்பல்! - Pamban Suspension Bridge

ராமநாதபுரம்: பாம்பன் தூக்கு பாலத்தை இன்று (ஆக்.29) மிதவை கட்டுமான கப்பல் கடந்துச் சென்றது.

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்த மிதவை கப்பல்
பாம்பன் தூக்கு பாலத்தை கடந்த மிதவை கப்பல்

By

Published : Aug 29, 2020, 3:37 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை, இன்று (ஆக்.29) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் கார்வார் துறைமுகத்திற்கு செல்வதற்கு மிதவை கப்பல் மற்றும் கடல் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் ஜாகப் பார்ஜ் என்ற கப்பலுடன் பாக் ஜலசந்தியில் காத்திருந்தது.

பாம்பன் தூக்கு பாலம் திறந்த பின் படகுகள் மெதுவாக பாம்பம் தூக்கு பாலத்தை கடந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றன. பாலத்தில் அலுவலர்கள் நின்றவாரே கப்பலுக்கு வழி காட்டினர். மேலும் சுற்றுலாப் பயணிகள் சிலர் பாம்பன் சாலை பாலத்தில் நின்றவாரே படகு பாலத்தை கடந்து செல்வதை ரசித்ததோடு, சிலர் மொபைல் போனில் படமும் எடுத்தனர்.

பாம்பன் தூக்கு பாலத்தை கடக்கும் மிதவை கட்டுமான கப்பல்
இதையும் படிங்க:கட்டுப்பாடுகளுடன் தொடங்கும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா!

ABOUT THE AUTHOR

...view details