தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் - fishery notice to boats owner

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த 14 விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை துணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இரட்டை மடி வலை
இரட்டை மடி வலை

By

Published : Aug 6, 2021, 9:20 PM IST

ராமநாதபுரம்:ராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்த விசைப்படகு மீனவர்கள், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக மீன்வளத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து உடனடியாக ராமேஸ்வரம் உதவி இயக்குநர் அப்துல் தலைமையிலான அலுவலர்கள் ரோந்து படகுகளில் கடலுக்குள் சென்று படகுகளை சோதனையிட்டனர்.

இதில் 14 படகுகளில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மீன்வளத்துறை துணை இயக்குநர் இளம்வழுதிக்கு தெரிவிக்கப்பட்டது.

படகு உரிமையாளருக்கு நோட்டீஸ்

பின்னர், துணை இயக்குநர் முன்னிலையில் நடைபெறும் விசாரணைக்கு வருமாறு படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில் படகில் பிடித்து வந்த மீன்களின் விலையில் 5 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும் என துணை இயக்குநர் இளம்வழுதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தடைசெய்யப்பட வலையில் மீன் பிடிப்பு - 200 கிலோ மீன்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details