ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் குருசடைத் தீவை சூழலியல் சுற்றுலாத்தலமாக மாற்றும் ஏற்பாடுகள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிதவை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை எதிர்த்து இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் மீனவர்கள் திடீரென போராடத்தில் ஈடுபட்டனர்.
மிதவை அமைப்பதை தடுக்கக் கோரி மீனவ மக்கள் போராட்டம் - Forest Department
ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா பகுதியில் மிதவை அமைப்பதை தடுக்கக் கோரி மீனவ கிராம மக்கள் வனத்துறையினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் வனத்துறை அலுவலகத்தில் சிறிது பதற்றம் நிலவியது. பின்னர் மீனவப் பிரதிநிதிகள் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடித்துக் கொள்ளலாம் என்றும், சுற்றுலாப்பயணிகளுக்கு அடையாளப்படுத்தவே மிதவை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் கூறப்பட்டது.
இது குறித்து மீன்பிடி தொழிலாளர் சங்கத் தலைவர் பால்சாமி, சுற்றுலாத்தலம் அமைக்கும் பணி என்ற பெயரில் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். சுற்றுலாத்தலம் அமைக்கும் பணியை வனத்துறை கைவிடவேண்டும், அப்படி செய்யாவிட்டால் மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.