தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோமாலியாவில் தவிக்கும் மீனவர்கள் மீட்க மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ராமநாதபுரம்: சோமாலியா நாட்டில் தவிக்கும் மீனவர்களை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மீனவ குடும்பத்தினர் மனு அளித்தனர்.

மீனவர்கள்
மீனவர்கள்

By

Published : Sep 15, 2020, 1:46 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, தொண்டி முள்ளிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சித்திரவேல், பிரபு, விஸ்வநாதன், சேரன் ஆகியோர் மீன் பிடிப்பதற்காகக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சோமாலியா நாட்டுக்குச் சென்றனர்.

ஆனால் அங்கு வேலைக்குச் சென்றதிலிருந்து இதுவரை அவர்களுக்குச் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் முறையான உணவு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் உடல் நலிவுற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

எனவே அவர்களைத் திரும்ப அனுப்ப ஏற்பாடு செய்யும்படி, அவர்களை அழைத்துச் சென்ற சிவகங்கையைச் சேர்ந்த ஏஜென்டிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் ஏமாற்றி வருவதாக மீனவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஏமாற்றிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ குமார் ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீட்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details