ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மீன்வரத்து அதிகமாகக் கிடைத்துவருகிறது.
தற்போது, பாம்பன் கடற்கரை ஓரத்தில் மீன்களை வெயிலில் கருவாடாக உலர்த்தும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். மீன்களை கடற்கரை ஓரத்தில் கோணிச் சாக்குகளை விரித்து, அதன் மீது உலர்த்தப்பட்டுவருவதால் மீன்கள் கருவாடாக மாறுவதற்கு அதிகமான நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.