தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு பேரை விடுவிக்க ஆட்சியரிடம் மனு!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை விடுவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

FAMILY COMING

By

Published : Aug 6, 2019, 6:06 PM IST

கடந்த ஜூலை 23ஆம் தேதி ராமேஸ்வரம், மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரது படகில் மீன்பிடிக்க ஜோசப் பால்ராஜ், பெனிட்டோ, நாகராஜ், இன்னாசி, சுப்பிரமணி, முனியசாமி, சத்தியசீலன் ஆகியோர்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதனையடுத்து கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதடைந்தது.

மீனவர்களின் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன்

அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் ஏழு பேரையும் படகுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை இலங்கை அழைத்துச் சென்று அங்கு உள்ள மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை செய்தனர்.

ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்

பிறகு தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் ஏழு பேருக்கும் ஆக., 7ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி பக்ருதீன் உத்தரவிட்டதையடுத்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நாளை மீண்டும் ஆஜர்படுத்தப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details