ராமேஸ்வரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் இயல்பை விட சற்று அதிகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை எச்சரிக்கை; சூறைக்காற்றால் மீன்பிடிக்கச் செல்லத்தடை ! - மீன்பிடிக்கச் செல்லத்தடை
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடைவித்துள்ளது.
WIND
மேலும் அதை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. சூறைக் காற்று காரணமாக ராமேஸ்வரம் துறைமுகப்பகுதியில் சுமார் 850க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால் மீன்பிடி தொழில் சார்ந்து இருப்பவர்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மீனவர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.