தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன் அதிகமா கிடைச்சது... ஆனா அதுக்கான விலை கிடைக்குமா? - கணவாய்

ராமநாதபுரம்: அதிக அளவில் மீன்கள் கிடைத்துள்ளதையடுத்து உரிய விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.

File pic

By

Published : Jun 16, 2019, 12:04 PM IST

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 60 நாட்கள் போடப்பட்ட மீன் தடைக்காலம் நேற்றைய (ஜூன் 15) தினம் முடிவடைந்தது. இதனையடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ஏர்வாடி, சாயல்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று இன்று (ஜூன் 16) கரை திரும்பினர்.

இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் இந்தாண்டு அதிக அளவில் கிடைத்துள்ளன. மீன்கள் அதிகம் கிடைத்துள்ளதால் உரிய விலை கிடைப்பதில் சந்தேகம் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்றுமதி செய்யும் இறால் மீன்களுக்கு மத்திய, மாநில அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள்

ABOUT THE AUTHOR

...view details