தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பனில் மின்கசிவு: துரிதமாக செயல்பட்ட அலுவலர்கள் - fire accident in ramanathapuram

பாம்பன் சாலைப் பாலத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினால் தீவுப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. தற்போது, மின்கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.

pamban
பாம்பன்

By

Published : Aug 5, 2021, 7:46 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து பாம்பன் சாலைப் பாலத்தின் வடக்கு மற்றும் தெற்கு நடைபாதைகளில் பதிக்கப்பட்ட மின்சார வயர்கள் மூலமாக ராமேஸ்வரம் நகராட்சி, தங்கக்சிடம், பாம்பன் ஊராட்சிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.

மேலும் பாம்பன் சாலை பாலத்தில் மின் விளக்குகளுக்கான வயர் இணைப்புகளும், தொலைப்பேசி மற்றும் பிராட்பேண்ட் இணையதள பைபர் வயர்களும், காவிரி கூட்டுக்குடிநீர் குழாயும் உள்ளன.

இந்நிலையில், பாம்பன் சாலைப் பாலத்தின் தெற்கு நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த மின்சார வயர்களில் நேற்றிரவு மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

பாம்பனில் மின்கசிவு

இதுகுறித்து அங்கிருந்த மக்கள், மண்டபம் துணை மின் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, உடனடியாக ராமேஸ்வரம் தீவிற்கான மின் சப்ளை முழுமையாக நிறுத்தப்பட்டது.

உடனடியாக மின்கசிவு சரிசெய்யப்பட்டு, தீயணைப்புத் துறை உதவியுடன் தீயும் அணைக்கப்பட்டது. இதனால் பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று (ஆக.5) பிற்பகல் பாம்பன் பாலத்தில் மின்கசிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மீண்டும் மின் சப்ளை வழங்கப்பட்டது .

இதையும் படிங்க:பேருந்து நிலையத்தில் கையில் பிளேடுடன் ரவுடி மிரட்டல் - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details