ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அதானியின் சூரிய ஒளி மின் நிலையம் அமைந்துள்ளது. இதன் முன்பாக இன்று (டிச. 14) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் பிரிவு மாவட்டச் செயலாளர் முத்து விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர் சூரிய ஒளி மின்நிலையம் முன்பாக முற்றுகையிட்டனர்.