தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை 100 சதவீதம் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் - Ramanathapuram District News

ராமநாதபுரம்: பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை 100 சதவீதம் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

By

Published : Jan 7, 2021, 6:40 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2018 - 19ஆம் ஆண்டு கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக 117 வருவாய் கிராமங்கள் முழுவதுமாக பாதிப்பை சந்தித்தன.

அப்போது பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியது. ஆனால் வெறும் 25 சதவீதம் மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கியது.

இதனால், 100 சதவீதம் இழப்பீட்டுத் தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதற்கு காப்பீடு நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால் 100 சதவீதம் இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், திருவாடானையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து விவசாயிகள் திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும், இல்லை என்றால் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திருவாரூரில் கனமழையால் நெர்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details