ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் கிராமத்தில் 13 நாய்கள், காகம் உள்ளிட்டவைகள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்துகிடந்தன. அதனையடுத்து விசாரணை செய்ததில், மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது நாய், சில நாட்களுக்கு முன்பு தெற்கு கொட்டகை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரது ஆடுகளை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் ஆட்டிறைச்சியில் விஷ மருந்தைக் கலந்து மங்கலம் கிராமத்தின் ஒரு சில பகுதிகளில் வீசியுள்ளார்.
நாய்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி மீது வழக்குப்பதிவு! - ramanathapuram
ராமநாதபுரம்: நாய்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நாய்களை கொன்ற விவசாயி!
இதை சாப்பிட்ட நாய்கள், காகம் போன்றவை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாரிமுத்து கடலாடி காவல் துறையிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் விஷம் வைத்து 13 நாய்களை கொன்றதாக விவசாயி முருகவேல் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இது குறித்து சுகாதாரத் துறையினர், கால்நடை பராமரிப்புத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என மங்கலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.