தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்கள் உயிரிழக்க அரசின் அலட்சிய போக்கே காரணம்

ராமநாதபுரம்: மாயமான மீனவர்களை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்காததே அவர்கள் உயிரிழந்ததிற்கு காரணம் என மீனவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

fisherman protest in taluk office

By

Published : Sep 7, 2019, 6:16 PM IST

ராமேஸ்வரத்திலிருந்து கடலூருக்கு புதிதாக படகு வாங்க சென்ற பத்து மீனவர்கள் சூறைக்காற்றில் சிக்கினர். இதில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். மீட்புப்படையினரின் உதவியுடன் ஆறு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு மீனவர்களின் உடல் இன்று அதிராமபட்டினம் பகுதியில் கரை ஒதுங்கியது. இவர்கள் இறந்ததற்கு அரசின் அலட்சிய போக்கே காரணம் என அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மீனவர்கள் காணாமல்போய் நான்கு நாட்களுக்கு மேலாகியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தங்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல்கூட கூறவில்லை என கூறி பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்கள், ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மீனவர்கள் உயிரிழக்க அரசின் அலட்சியபோக்கே காரணம்

பின்னர் தனுஷ்கோடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details