ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகேயுள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (48). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். புத்தாண்டு விடுமுறை தினமான இன்று (ஜனவரி 1), அந்த பகுதியில், மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேபிள் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
திருஉத்திரகோசமங்கையில், மின்கம்பத்தில் தொங்கிய கேபிள் வயரை சரி செய்த மின்வாரிய ஒப்பந்த ஊழியார், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கிய அவர், மின்கம்பத்திலே தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்த திருஉத்தரகோசமங்கை காவல்துறையினர் சண்முகத்தின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருஉத்திரகோசமங்கை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:புத்தாண்டை புறக்கணித்த விவசாயிகள்