ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தை அடுத்துள்ள ஆனந்தூர் பகுதியின் சுகாதார நிலையம் அருகே புதிய பாலம் கட்டும் பணியால் இரண்டு மின் கம்பங்கள் அகற்றப்பட்டு தற்காலிக மரக்கம்பங்கள் நடப்பட்டன.
ஆனந்தூரில் மர மின்கம்பங்களால் அபாயம்: மின்வாரியத்தை எச்சரித்த பொதுமக்கள் - கிராம மக்கள் கோரிக்கை
ராமநாதபுரம்: ஒடிந்துவிழும் நிலையில் இருக்கும் மர மின்கம்பங்களை அகற்ற மின்வாரியத்திடம் ஆனந்தூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மின்கம்பம்
தற்போது பாலத்தின் பணி நிறைவடைந்து இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையிலும் அந்த மரக்கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளது.
அந்த மரக்கம்பங்கள் ஒடிந்து சாலையில் விழுந்து விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆனந்தூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.