தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு - ராமநாதபுரம் அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம்: கறுப்புப் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

By

Published : Jun 2, 2021, 9:49 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயதான முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் முதியவருக்கு திடீரென கண்கள் சிவந்து வீக்கம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கறுப்புப் பூஞ்சை நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூன் 2) உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து முதியவரின் உடல் கீழக்கரை அருகே உரிய பாதுகாப்பு ஏற்பாடுடன் அடக்கம்செய்யப்பட்டது.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியைச் சேர்ந்த 56 வயது பெண், திருவாடானை அரக்கோட்டையைச் சேர்ந்த 45 வயது ஆண் ஆகிய இருவருக்கு கறுப்புப் பூஞ்சைத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க : இங்கிலாந்தில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details