தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: திமுக மனித சங்கிலி போராட்டம்! - போராட்டம்

ராமநாதபுரம்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

dmk protest

By

Published : Jun 23, 2019, 9:53 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம், தொண்டி, உப்பூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பாகமனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை மக்கள் மீது திணிக்கும் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திமுக மனித சங்கிலி போராட்டம்!

மேலும், தொண்டியில் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் சார்பாகவும் மனிதசங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் திடீரென ஊர்வலமாக வரத் தொடங்கினர். இதை காவல்துறை அதிகாரிகள் தடுத்து, இதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று கூற, காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details