ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமநாதபுர சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
மீன்சந்தையில் பரப்புரையை தீவிரப்படுத்திய திமுக நிர்வாகி - DMK executive intensifies campaign
ராமநாதபுரம்: திமுக வேட்பாளர் காதர் பாட்சா மீன் சந்தை, காய்கறி சந்தைகளில் மக்களை சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
DMK executive intensifies campaign in Ramanathapuram fish market
அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, அவர் தனக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து, இன்று காலை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட காய்கறி மற்றும் மீன் சந்தை பகுதிகளில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.