ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் #உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையை ஸ்டாலின் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக சார்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் வந்தனர்.
ஸ்டாலின் பரப்புரைக் கூட்டம்: பந்திக்கு முந்தி திமுகவினர் சச்சரவு! - உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
ராமநாதபுரம்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் சாப்பாடு வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பந்திக்கு முந்தி திமுகவினர் சச்சரவு
மேடையின் அருகிலேயே வருகை தரும் கட்சியினருக்கு என தனியே சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு முறையான வரிசைப்படுத்தல் இல்லை என்பதால், உணவு வாங்க வருபவர்கள் ஒருவரையொருவர் தள்ளியபடி முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே உணவு வாங்கும் அவசரத்தில் திமுகவினர் சச்சரவிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா காலத்தில் நிவாரணம் இல்லை; சம்பாதிப்பது வட்டிக்கு தான் செல்கிறது - திருச்சியில் வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!