தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த ராமநாதபுரம் ஆட்சியர் - ராமநாதபுரம் கரோனா தடுப்புப் பணி

ராமநாதபுரம்: கரோனா தடுப்புப் பணிக்காக கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் 27 மண்டல குழுக்களின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

By

Published : May 26, 2021, 8:31 PM IST

ராமநாதபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், ஆலிவர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 27 மண்டல குழுக்களின் வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து பேசிய அவர், "மண்டல குழு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்புகளை எவ்வித சமரசமுமின்றி நடைமுறைப்படுத்திட வேண்டும்.

மேலும் விதிமீறல்களின்போது பாரபட்சமின்றி அபராதம் விதித்திட வேண்டும்" என அறிவுறுத்தினார் .

இந்நிகழ்வின் போது ராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகபுத்ரா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சகாய ஸ்டீபன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details