ராமநாதபுரம் மாவட்டத்தில், கரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 392 நபர்கள் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் .
இதில் ஆயிரத்து 483 பேர் அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்குச் சிகிச்சை வழங்கிட ஏதுவாக, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நான்கு தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி, பரமக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் கரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.