கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணத் தொகையில் இரண்டாவது தவணை தொகையான ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய பை இன்று (ஜூன் 15) முதல் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருள்கள் அடங்கிய பை விநியோகம் - Second installment of corona relief
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 3.75 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு கரோனா நிவாரண இரண்டாவது தவணை தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய பை விநியோகம் தொடங்கியது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை வினியோகம்
அந்த தொகையுடன் 14 வகையான மளிகை பொருள்கள் அடங்கிய பை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக முன்னதாகவே டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, இன்று காலையிலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரணத் தொகை ரூ 2000 மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய பையை பெற்றுச் சென்றனர்.