தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரெவி புயல் தாக்கம்: இடிந்துவிழுந்த தனுஷ்கோடி தேவாலய சுற்றுச்சுவர் - Burevi cyclone at dhanushkodi

ராமநாதபுரம்: புரெவி புயலின் தாக்கத்தால் தனுஷ்கோடியில் நூற்றாண்டு சிறப்புமிக்க தேவாலய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

புரெவிப்  புயலால் தனுஷ்கோடி தேவாலயம் சிதைவு
புரெவிப் புயலால் தனுஷ்கோடி தேவாலயம் சிதைவு

By

Published : Dec 5, 2020, 1:30 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் ரயில் நிலையம், துறைமுகம், சுங்க நிலையம் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் அங்கிருந்த தேவாலயம் மட்டும் சிறிய அளவில் இடிபாடுகளுடன் தப்பியது.

நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த தேவாலயத்தைக் காண்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி வந்துசெல்கின்றனர். இந்நிலையில் புரெவிப் புயலினால் அப்பகுதியில் பெய்துவரும் பலத்த மழையில், தேவாலயத்தின் மேற்கு பக்க சுவர் நேற்று இடிந்து விழுந்தது.

இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நந்தகுமார் இருந்தபோது கொண்டுவந்த, மூன்று கோடி ரூபாய்மதிப்பிலான தேவாலய கட்டடங்களைப் புதுப்பிக்கும் திட்ட வரைவினை, தற்போது அமுல்படுத்தி எஞ்சியுள்ள கட்டடங்களைப் பாதுகாக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனுஷ்கோடியில் வசித்த 360 பேரை பேரிடர் மீட்புக் குழுவினர், வருவாய்த் துறையினர் ராமேஸ்வரம் தீவில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details