தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 19, 2019, 9:53 PM IST

ETV Bharat / state

கொத்து கொத்தாக செத்து கரை ஒதுங்கிய மீன்கள்!

ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கியது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fish

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள கோதண்டராமர் கோயில் அருகிலுள்ள கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலை அடுத்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மைய ஆய்வாளர்கள் இப்பகுதியிலிருந்து கடல் நீர், இறந்த மீன் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

அதிகப்படியான வெப்பத்தின் தாக்கம் இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் வெளியேறுவதால், கடல் நீரில் வெப்பம் அதிகரித்து மீன்கள் இறந்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மீன் வளத்துறை அலுவலர் கூறுகையில், 'கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து ஆக்சிஜன் அளவு குறைந்ததே மீன்கள் இறந்து கரை ஒதுங்கக் காரணம். பொதுவாக மீன்கள் 32 டிகிரி அளவிலான வெப்ப நிலையைத் தாங்கக் கூடியவை. நன்னீரில் வாழும் மீன்கள் மழைநீர் தேடி முன்னேறி வரும்போது நீரின் வெப்பம் தாங்காமல் உயிரிழந்துள்ளது' என்றார்.

இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

மேலும், மீன்கள் உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறந்து கரை ஒதுங்கிய மீன்களை அள்ளும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவற்றை சேகரித்து விற்கக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திடீரென இந்தளவிற்கு மீன்கள் இறந்து மிதப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாலை வனம்போல் காட்சியளிக்கும் கிராமம்: குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details