ராமநாதபுரதம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் படிப்படியாகக் குறைந்து வந்தாலும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
ராமநாதபுரத்தில் இன்று ஒரேநாளில் கரோனாவால் 17 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி இன்று ஒரேநாளில் புதிதாக 177 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 406 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்தமாக மாவட்டத்தில் 3 ஆயிரத்து 37 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரேநாளில் 17 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்து உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.