ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள துரத்தியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பாலமுருகன் (27). இவர் கூலி வேலை செய்துவருகிறார். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று தனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வந்த, 14 வயது மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு நான்காண்டு சிறை - sexually assault school girl
ராமநாதபுரம்: ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை அளித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பரமக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர், பாலமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். அதனையடுத்து இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று நடந்த இறுதி விசாரணையில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள், ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞர் பாலமுருகனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.