ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக உயர்ந்துவருகிறது. கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தொற்று புதிதாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று (ஏப். 30) புதிதாக 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு கரோனா! - Ramnad Corona
ராமநாதபுரத்தில் கரோனா தொற்று இன்று (ஏப். 30) 244 பேருக்கு உறுதியாகியுள்ளது. சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் குணமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் கரோனா மையம்
சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். முறையாக முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி பின்பற்றுதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.