ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தில் உள்ள மனநோயாளிகள் சிலர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளனர்.
ஏர்வாடியில் 11 மன நோயாளிகளுக்கு கரோனா உறுதி! - ராமநாதபுரம் அண்மைச் செய்திகள்
ராமநாதபுரம்: ஏர்வாடி மனநல காப்பகத்தில் உள்ள 11 மனநோயாளிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏர்வாடியில் 11 மன நோயாளிகளுக்கு கரோனா உறுதி
இதனைத் தொடர்ந்து மனநல காப்பகத்தில் உள்ள 49 மனநோயாளிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 மனநோயாளிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சையளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும படிங்க : "கறுப்பு பூஞ்சை" நோயை பெருந்தொற்றாக அறிவித்த ராஜஸ்தான் அரசு!