தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி தொடக்கம்! - மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம்: பாம்பன் ராமேஸ்வரம் பகுதியில் கனமழையால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.

fallen trees due to heavy rains
fallen trees due to heavy rains

By

Published : Dec 4, 2020, 8:59 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை, காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் பாம்பன் தனுஷ்கோடி பகுதியில் பல இடங்களிலும் சாலையோர மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.

அந்த மரங்களை அகற்றும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரப்பன் வலசை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மரம் ஒன்று காற்றில் சாய்ந்தது. சாலை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மரங்களை அகற்றும் பணி

இந்த பணிகளை தமிழ்நாட்டில் அரசின் கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் மேற்பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details