தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ராமநாதபுரத்தில் 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து'

ராமநாதபுரம்: மாவட்டத்தில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் போலியோ சொட்டு மருந்து முகாம் போலியோ சொட்டு மருந்து முகாம் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து ஆட்சியர் வீரராகவ ராவ் Ramanathapuram Polio Drop Camp Polio Drop Camp Collector Veeraraghava Rao About Polio Drop Camp
Collector Veeraraghava Rao About Polio Drop Camp

By

Published : Jan 19, 2020, 6:39 PM IST

பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் இளம்பிள்ளைவாதம் நோயை தடுப்பதற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றதுது. அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 229 போலியோ சொட்டு மருந்து மையங்களில் ஐந்து வயதிற்குள்பட்ட ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பணியை நான்காயிரத்து 912 பணியாளர்கள் மேற்கொண்டனர்.

போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள் என அனைத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. 27 சிறப்பு குழுக்கள், 33 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோயில்கள், திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள், கல்யாண நிகழ்ச்சிகள், இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வழங்கப்பட்டது.

ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தியாளர் சந்திப்பு

முன்னதாக, காலையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சொட்டுமருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கிவைத்து ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.

இதையும் படிங்க:

'பாப்பா ஆ காட்டு... ' - குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றிய அமைச்சர் கே.பி. அன்பழகன்

ABOUT THE AUTHOR

...view details