இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த செந்தில்குமார், நாகராஜ், சாம்சன்டார்வின், மெசியா ஆகிய நான்கு மீனவர்களின் உடல்களும் இலங்கையிலிருந்து கடற்படை படகு மூலம் கொண்டு வரப்பட்டு இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டு ராமநாதபுரம் வந்தடைந்தது.
உயிரிழந்த மீனவர்களின் உடல்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அஞ்சலி! - இலங்கை கடற்படை தாக்குதல்
ராமநாதபுரம்: இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Collector Dinesh Ponraj pays homage to fishermen's bodies
இதையடுத்து, நான்கு மீனவர்களின் உடல்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, நான்கு பேரின் உடல்களும் அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இதையும் படிங்க:இலங்கையில் கொல்லப்பட்ட மீனவர்களின் உடலுக்கு தமிழகத்தில் அஞ்சலி