முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் கால்நடை பராமரிப்போர், பரமக்குடியில் நெசவாளர்கள், சௌராஸ்டிரா இனமக்கள், வர்த்தகர் சங்கம், மற்றும் பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர், ”நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கியது அதிமுக அரசு. கரோனா காலத்தில் நெசவாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நெசவாளர்களுக்கு ரூ.300 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் சட்டம் ஒழங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம்தான். கரோனா கால பொருளாதார பாதிப்பு இருந்த நிலையிலும், ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.