ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் மூலம் பணம் திரட்டி ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த நீதிமணி அவரது மனைவி மேனகா மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த ஆசிரியரான ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நீதிமணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திரை பிரபலங்கள் ’7ஜி’ சிவா, முருகானந்தம், ’ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியது.
இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஏற்கனவே ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். மேலும், இவ்வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக்கோரி மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி, அவரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்பிணையில் செல்ல உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது.