கோவை சுந்தராபுரத்தையடுத்த பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது ஒன்பது வயது மகள் கோடை விடுமுறையை அடுத்து வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முதியவர் செல்வராஜ் (60) என்பவருடன்பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் நான்கு பேர் கைது - போக்சோ
கோவை: ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதான நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் மூன்று பள்ளி மாணவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், முதியவர் செல்வராஜை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
ஒன்பது வயது சிறுமியை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.