ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார். இவரது கணவர் முனியசாமி அதிமுக மாவட்டச் செயலாளராக பணியாற்றுகிறார்.
அதிமுக வேட்பாளர் காரிலிருந்து ரூ.94 ஆயிரம் பறிமுதல் - அதிமுக வேட்பாளர்
ராமநாதபுரம்: அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமியின் காரிலிருந்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கீர்த்திகா முனியசாமியின், வாகனம் ஏர்வாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பறக்கும் படை அலுவலர்கள், வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், 2000 ரூபாய் கொண்ட, 47 கவர்கள் இருந்தன.
இதையடுத்து, அதிலிருந்த 94 ஆயிரம் ரூபாய் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் மாவட்டச் செயலாளர் முனியசாமி இல்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.