தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் பாதித்த நபர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரம்: கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கரோனாவால் பாதித்த நபர் உள்பட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ramanathapuram
ramanathapuram

By

Published : Apr 18, 2020, 5:48 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உள்ளது. அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பரமக்குடியைச் சேர்ந்த இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 16ஆம் தேதி மண்டபம் பகுதியைச் சேர்ந்த 42 வயதானவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது நண்பர் ராஜா என்பவருடன் சமூக வலைதளங்களில் கரோனா குறித்து தவறான கருத்துக்களை பகிர்ந்துவந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் இருவர் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு கூட்டாளி அப்துல்லா மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழங்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பின் போது

இதுகுறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண் குமார், சமூக வலைதளங்களை பயன்படுத்தி கரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பும் விதமாக பேசிய கரோனா பாதிக்கப்பட்ட நபர் மீதும், அவருக்கு உடந்தையாக அதை பகிர்ந்த ராஜா, அப்துல்லா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம், அவ்வாறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா சோதனை முடிவு வருவதற்கு முன்பு உயிரிழந்த 72 வயது முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details