தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பனிலிருந்து 90 கிமீ வடகிழக்கே புரெவி புயல்! - cyclone path near pamban

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பாம்பனிலிருந்து 90 கிமீ வடகிழக்கே புரெவி புயல் நிலைகொண்டுள்ளது.

burevi-cyclone
burevi-cyclone

By

Published : Dec 3, 2020, 8:31 AM IST

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை-முல்லைத்தீவு இடையில் கரையைக் கடந்ததாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இந்த நிலையில் புயலானது தற்போது, தமிழ்நாட்டின் பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் இப்புயல் நாளை (நள்ளிரவு முதல்) கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:திரிகோணமலை வடக்கே கரையைக் கடந்தது புரெவி புயல்!

ABOUT THE AUTHOR

...view details