வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி இன்று இலங்கை திரிகோணமலை பகுதி கரையைக் கடந்து நாளை பிற்பகலுக்கு மேல் கன்னியாகுமரி பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதன் எதிரொலியாக ராமநாதபுரம்,உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை ஒட்டியுள்ள கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவ கிராம மக்கள் திருமண மண்டபங்கள், பல்நோக்கு புயல் பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் பகுதியில் வசிக்கும் மீனவ மக்களையும் அருகே உள்ள திருமண மண்டபங்கள் தங்கும் இடங்களுக்கு இடமாற்றம் செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் தீவை மிரட்டும் புரெவி புயல்! மேலும் தனுஷ்கோடி பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் தீவு முழுவதும் 50 கி.மீ வேகம் வரை பலத்த சூறைக்காற்று, சாரல் மழை கடலின் சீற்றம் என புரெவி புயலின் தாக்கம் அதிகரிப்பதை காணமுடிகிறது.
இதையும் படிங்க: புரெவி புயல்: இராமநாதபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!