ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை அருகே, 12 வயது சிறுவன் சுந்தர், 9️ வயது சிறுவன் நம்பு லோகேஷ் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார், இருவர் மீதும் மோதியது.
சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் கார் மோதி உயிரிழப்பு! - ramandhapuram accident news
ராமநாதபுரம்: சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலையை கடக்க முயன்ற சிறுவன்: கார் விபத்தில் உயிரிழப்பு
இதில் நம்பு லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சுந்தர் பலத்த காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு