தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் தூக்கு பாலத்தில் பாறையில் சிக்கிய படகுகள் - ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம்

பாம்பன் தூக்கு பாலத்தை கடக்க முயன்ற விசைப்படகுகள் பாறையில் சிக்கியதால், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு படகுகள் மீட்கப்பட்டு தூக்கு பாலம் மூடப்பட்டது.

பாம்பன் தூக்குப் பாலத்தில் பாறையில் சிக்கிய படகுகள்
பாம்பன் தூக்குப் பாலத்தில் பாறையில் சிக்கிய படகுகள்

By

Published : Aug 26, 2021, 6:03 PM IST

ராமநாதபுரம்:பாம்பன் தூக்கு பாலத்தில் அடிக்கடி பழுதுகள் அல்லது கடல் உள்வாங்குவதால்நீர்மட்டம் குறைந்து பாறைகளில் படகுகள் சிக்கி சேதமடைகின்றன.

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் நேற்று (ஆக. 25) வடக்கு பகுதியிலிருந்து மீன்பிடி விசைப்படகுகள் தெற்குப் பகுதியை நோக்கி கடந்து சென்றன.

தொடர்ந்து வந்த விசைப்படகில், ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றும், விசைப்படகு ஒன்றும் நீரோட்டம் குறைவாக இருந்த பகுதியில் பாறைகள் இருந்ததால் செல்ல முடியாமல் சிக்கின.

கடல் நீர் மட்டம் குறைவு

சிக்கிய படகுகளை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு இரண்டு படகுகளும், பாறைகளிலிருந்து மீட்கப்பட்டன. தொடர்ந்து படகுகள் கடந்து செல்வதற்காக ரயில் தூக்கு பாலம் திறந்த நிலையில் இருந்தது. இதையடுத்து, ரயில்வே அலுவலர்கள் அறிவுறுத்தலின் பேரில் தூக்க பாலம் மூடப்பட்டது.

இதையும் படிங்க: 'சென்னை புறநகர்ப் பகுதியில் கனமழை - 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'

ABOUT THE AUTHOR

...view details