இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி காலை 8 மணியளவில் தொடங்கியது.
வெற்றி கொண்டாட்டத்தில் பாஜகவினர்! - பாஜக
ராமநாதபுரம்: மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெருன்பான்மையோடு ஆட்சியமைத்ததை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பாஜக
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்தே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் 303 மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது.
இதை கொண்டாடும் விதமாக ராமநாதபுரத்தில் பாஜக தொண்டர்கள் அரண்மனை முன்பாக பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.