ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயங்கிவருகிறது. இந்நிலையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம்-ஐ உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் இருந்து காவல் துறையினர், ஏடிஎம் இயந்திரம் உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து அப்பகுதியிலுள்ள வங்கியின் கிளை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.