ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் நீரினைப் பகுதிகளின் கரையோரங்களில் மாங்குரோவ் மரங்கள் நிறைந்து உள்ளன. இங்கு கடல்வாழ் உயிரினங்களின் பல் உயிர் பெருக்கத்துக்கு உதவி வரும் 'பாலிகீட்ஸ்' எனப்படும் மண் புழுக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும் இந்தப் புழுக்களை கடலின் சேற்றுப் பகுதியில் இருக்கும் இறால் உள்ளிட்ட மீன் இனங்களும், சிலப் பறவை இனங்களும் உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன.
இப்புழுக்களை சிலர் சென்னைக்கு கடத்துவதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்ததில், ஐந்து லட்சம் மதிப்புள்ள 160 கிலோ கிராம் பாலிகீட்ஸ் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
Arrests of polycritic worms in Ramanathapuram, பாலிகீட்ஸ் புழுக்களை சென்னைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது இதையடுத்து அதனை கடத்தி வந்த 8 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழுக்கள்!