ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட சாயல்குடி அருகே உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு, அங்கேயே அனைவரும் வாக்களித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை (ஏப்.6) நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு இக்கிராமத்தில் வாக்கு சாவடி அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அருகாமை கிராமங்களான வெள்ளம்பல், வேடகரிசல்குளம் ஆகிவற்றை அல்லிகுளம் கிராம மக்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் கிராமத்திலேயே வாக்கு சாவடி அமைக்க வேண்டும் எனவும் அக்கிராமத்தினர் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவிள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டும் கிராம மக்கள், கறுப்பு கொடி கட்டி இத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.