ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பரமக்குடி தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படும். கடந்த 15 முறை நடைபெற்ற பொதுத் தேர்தல், இடைத்தேர்தலை வைத்து பார்க்கும்போது அதில் எட்டு முறை அதிமுக நேரடியாக பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியை தக்க வைத்தது. ஒருமுறை அதன் கூட்டணி கட்சி வென்றது.
அதிமுக கோட்டையில் கொடியேற்றிய திமுக!
ராமநாதபுரம்: அதிமுக கோட்டையாக கருதப்படும் பரமக்குடியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியது.
அதிமுக கோட்டையில் கொடியேற்றிய திமுக!
கடந்த, இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன் தனது வெற்றியை பதிவு செய்திருந்தார். இந்த முறை பரமக்குடி தொகுதி மிகவும் இழுபறியாக இருக்கும், அதிமுகவிற்கு வாய்ப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனை விட திமுக வேட்பாளர் முருகேசன் 13 ஆயிரத்து 285 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இதன்மூலம் அதிமுக கோட்டையாக கருதப்படும் பரமக்குடியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியது.