தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சரின் வீட்டு முன் கதறி அழுத நடிகை - அதிமுக

ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி வழக்கை வாபஸ் வாங்க வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக மணிகண்டனை ராமநாதபுரம் வீட்டிற்கு தேடி வந்த நடிகை கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் வீட்டு முன் கதறி அழுத நடிகை
ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் வீட்டு முன் கதறி அழுத நடிகை

By

Published : Oct 15, 2022, 6:20 PM IST

ராமநாதபுரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திரைப்பட துணை நடிகையான சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி, கட்டாய கருகலைப்பு செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நின்று தனக்கு நீதி வேண்டும் என கூறி அழுதார். அப்போது அவர் பேசிய அவர்,

”’வழக்கை வாபஸ் செய்து கொள் நீ என்னால் நிறைய துன்பத்திற்கு ஆளாகி விட்டாய், பாதுகாப்பு தொகை கொடுத்து உன்னை இறுதிவரை பார்த்துக் கொள்கிறேன்’ என கூறி வழக்கை அவர் வாபாஸ் பெற வைத்தார்.

ஆனால், தற்பொழுது கைபேசி எண்ணை பிளாக் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். முன்னதாக மதுரையில் மணிகண்டனை பார்த்தபோது என்னை கண்டவுடன் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டார். உடனே மதுரையில் உள்ள வீட்டில் உள்ளே வீட்டை பூட்டி வைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டதாக அவரின் உதவியாளர்கள் தெரிவித்தனர். ஆதலால், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்ததாக”, கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சரின் வீட்டு முன் கதறி அழுத நடிகை

நடிகை சாந்தினி மணிகண்டனை தேடி வீட்டிற்கு வந்த காரணத்தால் மணிகண்டனின் அம்மா மற்றும் குடும்பத்தினர்கள் மிரட்டியதால் கண் கலங்கி கதறி அழுதார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பஜார் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். ஆனால், காவல்துறையினர் மதுரையில் புகார் அளிக்க சொன்னதால் அங்கு சென்று அளிக்கவுள்ளதாக நடிகை சாந்தினி கூறினார், பின்னர் அவரை பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்தனர். இதனால் ராமநாதபுரம் பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்புக்கு நிலவியது.

இதையும் படிங்க:மனைவியை துன்புறுத்தி சின்னத்திரை நடிகர் - படப்பிடிப்பு தளத்தில் வைத்து அதிரடி கைது

ABOUT THE AUTHOR

...view details