தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த மண்ணில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு! - President Abdul Kalam

ராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி, அவரின் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

By

Published : Jul 27, 2019, 4:04 PM IST

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, அவரது அண்ணன் முத்துமீரான் தலைமையில், ராமநாதபுர மாவட்டம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இதில் அவரது குடும்பத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சொந்த மண்ணில் அனுசரிக்கப்படும் முன்னாள் குடியரசு தலைவரின் நினைவு தினம்!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அப்துல்கலாமின் பேரன் சலீம், "மாணவர்கள் அதிகம் நேசித்த அப்துல்கலாம் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் கருத்துகள் மாணவர்களை ஊக்கப்படுத்திவருகிறது. அவரின் கனவை நினைவாக மாற்ற மாணவர்கள் உறுதி எடுக்கவேண்டும். அவரின் மற்றொரு கனவான, 122 கோடி பேருக்கு 122 கோடி மரங்கள் வளர்ப்பு திட்டத்தை அப்துல் கலாம் பவுண்டேசன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு சென்ற சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ், "கலாமின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். நாட்டிற்காக எந்த ஒரு களங்கமும் இல்லாமல் உழைத்த மாமனிதர் அப்துல் கலாம். அவர் சாதி மதங்களை கடந்த ஒப்பற்ற தலைவர். அந்த மாமனிதரின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்து முதலமைச்சர் வருகை தந்து மரியாதை செலுத்த வேண்டும். அவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அவரின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details