இராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் பசு, டால்பின் போன்ற பல்வேறு வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று ( மே.11) மண்டபம் அருகே புதுமடம் கடற்கரையில் கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கி காணப்பட்டது.
புதுமடம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஒரு டன் எடையுள்ள கடல் பசு! - மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் பசு
இராமநாதபுரம் அருகே கடல்பகுதியில் ஒரு டன் எடையுள்ள கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து, அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மண்டபம் வனச்சரகர் வெங்கடேசன்
தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடல் பசுவை ஆய்வு செய்தனர். ஆய்வில், அது மூன்று மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் சுற்றளவு, ஒரு டன் எடை கொண்ட பெண் கடல் பசு என்பது தெரியவந்தது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு கடல்பசு இயற்கையாக உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கடன் பிரச்னை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை!