தூத்துக்குடி மாவட்டம் தரவைகுளத்திலிருந்து நேற்று ஒரு விசைப்படகில் 10 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பாம்பன் பாலத்தை கடந்து நாகப்பட்டினம் செல்வதற்காக வந்து கொண்டிருக்கும்போது பாம்பன் கரையிலிருந்து சுமார் ஏழு நாட்டிக்கல் மைல் தூரத்தில் பாறையின் மீது படகு மோதி கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 மீனவர்கள் கடலில் விழுந்து தவித்து வந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டரில் இந்தியக் கடற்படை வீரர்கள் வந்து ஆறு மீனவர்களை மீட்டனர். எஞ்சிய நான்கு மீனவர்களை சக மீனவர்கள் நாட்டு படகில் மீட்டும் பாம்பன் தெற்கு துறைமுகத்திற்கு வந்தனர்.