ராமநாதபுரத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரமக்குடி, முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, கடலாடி, சாயல்குடி ஆகிய ஆறு ஊராட்சிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர்.
'இதுவரை எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க தவறவில்லை' - 93 வயது முதியவர்! - ramanathapuram latest news
ராமநாதபுரம்: இதுவரை எந்தத் தேர்தலிலும் நான் வாக்களிக்க தவறவில்லை என வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த 93 வயது முதியவர் கூறியுள்ளார்.
ramanathapuram
அவர்களுக்கு இணையாக தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற பரமக்குடி ஒன்றியம் உரப்புளி சுந்தர் நகரைச் சேர்ந்த 93 வயது முதியவர் கிருஷ்ணன், தனது 83 வயது மனைவி வரிசையில் நின்று வாக்களித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது "இதுவரை நான் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கத் தவறியதில்லை. அனைத்து தேர்தலிலும் பங்கேற்று வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை" என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: 98 வயது மூதாட்டி வாக்களிப்பு!